சென்னை: தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றத்தை தொடர்ந்து 33 அமைச்சர்களைக் கொண்ட தமிழக அமைச்சரவையும் பதவி ஏற்றது.  பதவி ஏற்பு விழா முடிந்ததும், முதல்வர், அமைச்சசர்களுடன் கவர்னர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள திமுக, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவை இன்று பதவி ஏற்றது.

தமிழகத்தின் 23வது முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழா உறுதிமொழியின்போது,  வழக்கத்துக்கு மாறாக,  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று கூறி, தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். முதல்வர் முக ஸ்டாலினை தொடர்ந்து அவர் தலைமையிலான 33 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டனர். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா முடிவடைந்தது. அதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் ஸ்டாலின் உள்பட 34 அமைச்சர்கள்  சேர்ந்த குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.