சென்னை : அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் காலம் 15ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வகுப்பு படித்த மாணவர்கள், ஐடியில் படிக்க விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர, ‘ஆன்லைன்’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி படிக்க விரும்பும் மாணவர்கள் அருகில் உள்ள, தொழில்பயிற்சி நிலையங்களிலும், நேரில் சென்று விண்ணப்பிக்க லாம்.
விபரங்களுக்கு, முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், எண்: 55, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, வடசென்னை- – 600 021 என்ற முகவரியில் அணுகலாம். மேலும், 94990 55653 என்ற எண்ணிலும், தொடர்பு கொள்ளலாம் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது. 
இதற்கு, எட்டாம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சேர விரும்புவோர், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, செப்., 15ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், அருகில் உள்ள, தொழில் பயிற்சி நிலையங்களிலும், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு, முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், எண்: 55, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, வடசென்னை- – 600 021 என்ற முகவரியில் அணுகலாம்.மேலும், 94990 55653 என்ற எண்ணிலும், தொடர்பு கொள்ளலாம் .
இவ்வாறு தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.