சென்னை: சொந்த மக்களை அரசே சுரண்டக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். சென்னை, கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்கக் கோரி தூய்மை பணியாளர்கள் ஜெயபால், மாரிமுத்து ஆகியோர்  வழக்கு தொடர்ந்தனர்.  அவர்களது மனுவில், , குறைந்த ஊதியம் உள்ள தூய்மைப் பணியாளர்களான தங்களை ஓட்டுநர்களாகப் பயன்படுத்திவிட்டு, கல்வித் தகுதியை காரணம் காட்டி தற்போது ஓட்டுநர்களாக நியமிக்க அரசு மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. தூய்மைப் பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுநராகப் பயன்படுத்தியது, சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு ஒப்பானது. அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.