சண்டிகர்:

அரசு பள்ளியில் பயிலம் மாணவருக்கு ரூ. 12 லட்சத்தில் கூகுளில் வேலை கிடைத்துள்ளது.


சண்டிகரை சேர்ந்தவர் ஹர்ஷத் சர்மா (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கிராபிக் டிசைனிங் படித்துள்ள இவர் உலகின் முண்ணனி இணையத் தொழிநுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் கூகுள் நிறுவனம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். ஆன்லைன் மூலமாகவே நேர்முக தேர்விலும் வெற்றி பெற்றார்.

கூகுள் நிறுவனத்தில் தேர்வாகி உள்ள ஹர்ஷத் சர்மாவிற்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சி தற்போது நிறைவடைந்துவிட்டது. இதனால் மாதத்திற்கு 12 லட்சம் ரூபாய் சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். பயிற்சி அளித்து கொண்டிருக்கும் போது மாதம் 4 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்றுள்ளார். ஹர்ஷத் சர்மா இந்த மாதத்திற்குள் கூகுள் நிறுவனத்தில் விரைவில் ராஃபிக் டிசைனிங் பணியில் சேரவுள்ளார்.

‘‘கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது கனவு நிறைவேறிவிட்டது எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றி’’ என ஹர்ஷத் சர்மா கூறியுள்ளார். ஹர்ஷத் சர்மா அரியானா மாநிலம் குருஷேத்ராவில் உள்ள மதானாவை சேர்ந்தவர். இவர் 12-ம் வகுப்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவை தேர்ந்தேடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.