சென்னை: அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்க்ரகளுக்கு செலவினத்தொகை ரூ.30ல் இருந்து ரூ.50ஆக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு உடல் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகை ரூ.30 வழங்கப்பட்டு வந்தது. தற்போது சோப்பு உள்பட பராமரிப்பு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், செலவித்தொகையை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அரசு விடுதி மாணாக்கர்களின் செலவினத்தொகை ரூ.30-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022-2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்:
அதன்படி, ”22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி ரூ.2.52 இலட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக,சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை ரூ.30-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.