நாமக்கல் அருகேயுள்ள பொட்டிரெட்டிபட்டியில் அரசு துவக்கப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து இரு மாணவிகள் காயமடைந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு துவக்கப்பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் காயத்ரி மற்றும் கனிஷ்கா ஆகிய மாணவிகள் காயமடைந்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த காயத்ரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.