டெல்லி: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தையொட்டி, நிதி பகிர்வு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுஉள்ளது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான யூனியன் வரிகளின் நிகர வருவாயின் மாநில வாரியான விநியோகத்தைப் பட்டியலிட்ட ஒரு விரிவான அட்டவணை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது, இது மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.1,78,173 கோடி எவ்வாறு ஒதுக்கப்படும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. இதில், தமிழகத்தின் பங்காக ரூ. 7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் வாரியாக நிதி ஒதுக்கீடு பட்டியல்:
ஆந்திரப் பிரதேசம் 7211
அருணாச்சல பிரதேசம் 3131
அசாம் 5573
பீகார் 17921
சத்தீஸ்கர் 6070
கோவா 688
குஜராத் 6197
ஹரியானா 1947
இமாச்சல பிரதேசம் 1479
ஜார்கண்ட் 5892
கர்நாடகா 6498
கேரளா 3430
மத்திய பிரதேசம் 13987
மகாராஷ்டிரா 11255
மணிப்பூர் 1276
மேகாலயா 1367
மிசோரம் 891
நாகாலாந்து 1014
ஒடிசா 8068
பஞ்சாப் 3220
ராஜஸ்தான் 10737
சிக்கிம் 691
தமிழ்நாடு 7268
தெலுங்கானா 3745
திரிபுரா 1261
உத்தரப்பிரதேசம் 31962
உத்தரகாண்ட் 1992
மேற்கு வங்காளம் 13404