சென்னை:
நாளை நடக்க இருக்கும் காவிரி விவகார கூட்டத்தில் பங்கேற்க தமிழக அதிகாரிகள் டில்லி புறப்பட்டனர்.
காவிரி விவகாரத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் வாரியம் அமைப்பதை தள்ளிவைத்துக்கொண்டே இருக்கிறது மத்திய அரசு.
இந்த நிலையில், இது குறித்து பேச தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்தது. மத்திய நீர்வளத்துறை நடத்த இருக்கும் இந்தக் கூட்டம் நாளை டில்லியில் நடக்கிறது.
இதில் கலந்துகொள்ள தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்டோர் டில்லி புறப்பட்டனர்.
“உச்சநீதிமன்றம் இறுதியான தீர்ப்பு என்று அறிவித்து காவிரி மலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. இதை அமல்படுத்த வேண்டி வலியுறுத்துவதைவிட்டுவிட்டு ஏன் இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு கலந்துகொள்ள வேண்டும்” என்ற விமர்சனம் எழுந்துள்ளது.