சென்னை :

30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி சென்னை உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கியது.

 

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணி நியமனத்துக்காக ரூ.30  லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். அவருக்கு  உதவியாக இருந்த் பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார்.

மேலும் கணபதியின் வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்ட ஏராளமான பணம் மற்றும் ஆவனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, அவரை துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் பன்வாரிலால் நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், லஞ்சப் புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி சார்பாக கோவை நீதி மன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

கணபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில்மேலும்  20-பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கணபதியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் கணபதி சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம்,  கணபதிக்கு பல்வேறு நிபந்ததனையின் பேரில் ஜாமின் வழங்கியது.

பாஸ்போர்ட்டை  ஒப்படைக்க வேண்டும், கோவையை விட்டு வெளியேறக் கூடாது, மறு உத்தரவு வரும் வரை லஞ்ச ஒழிப்பு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் பல நிபந்தனைகளை விதித்த்து  கணபதிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.