காஞ்சிபுரம்: அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக,  மீண்டும் ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம்  அரசு அதிகாரிகளின்  மெத்தனத்தை மீண்டும் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

தமிழக முதல்வர் கடந்த 9ந்தேதி அன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்த காஞ்சிபுரம் சிப்காட்  புதிய திட்ட அலுவலகத்தில் உள்ள கழிவறையில், ஒரே அறையில் இரண்டு பேர் அருகருகே அமரும் வகையில் வெஸ்டர்ன் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இது  தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திப் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா, அரசு பொறியாளர் என்ன செய்துகொண்டிருக்கிறார், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் செயல்படுகிறதா என பொதுமக்களும், நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கோவையில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியது.  ஒரே அறை அறையினுள் இரு கழிப்பறை கட்டிய கோவை மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் கடுமையாக சாடிய நிலையில், பின்னர்,  சர்ச்சைக்குள்ளான அந்த  கழிப்பறை உடைக்கப்பட்டு,  ஆண்கள் சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலகத்தில், ஒரே கழிவறையில் இரண்டு கிளாஸ் செட்டுகள் அருகருகே அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய திட்ட அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது. அங்குள்ள கழிவறையில் ஒரே அறையில் இரண்டு கிளாஸ் செட்டுகளைஅடுத்தடுத்து அமைத்து உள்ளனர். இது பொறியாளருக்கு தெரியுமா என்று  பொது மக்கள் எழுப்பியுள்ளனர்.

பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் ரூ.1கோடியே 88லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய திட்ட அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கடந்த 9ந்தேதிதான் திறந்து வைத்தார். இந்த   அலுவலக கட்டிடத்தில் ஒரே கழிவறையில், அருகே அருகே இரண்டு வெஸ்டர்ன் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா தெரிவிக்கையில், ”இந்த அலுவலகத்தில் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இரண்டு வெஸ்டர்ன் கழிப்பறை இடையில் தடுப்புச் சுவர் ஏற்படுத்தி இரண்டு கழிவறைகளாக முழுமை பெறும்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அறையின் அகலம் ஒரு கழிப்பறைக்கு மட்டுமே பயன்படும் வகையில் இருப்பதாக செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.

ஒரே அறையில் இரு கழிப்பறை: விமர்சனங்களைத் தொடர்ந்து சிறுநீர் கழிப்பிடமாக மாற்றியது கோவை மாநகராட்சி…