சென்னை: சென்னையில் புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வரும் 16ந்தேதி புத்தக கண்காட்சி தொடங்குகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 45வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், புத்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக ஜனவரி 3ந்தேதி தமிழகஅரசு அறிவித்தது.
தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால், பிப்ரவரி 1ந்தேதி முதல் ஊரடங்கு அகற்றப்பட்டு, மேலும் பலர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அனைத்து நிறுவனங் களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களும் முழுமையாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என பபாசி அமைப்பினர் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, தமிழக அரசு புத்தக கண்காட்சியை தொடங்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் 45வது புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பபாசி புத்தகக்கண்காட்சி, தீவுத்திடல் வர்த்தக கண்காட்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…