சென்னை: தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளில், பெட்ரோல் நிலையம், சார்ஜிங் நிலையம் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அந்த வாகனங்களில் உள்ள பேட்டரிகள் சார்ஜ் ஏற்றும் வகையில், பெட்ரோல் பங்குகளை போல, சார்ஜிங் மையங்களை ஏற்படுத்த மத்திய, மாநில அரசிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம் அமைக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதையடுத்து, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் 10 ‘சார்ஜிங்’ மையங்களை திறந்துள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல் மையங்கள், ஜார்ஜிங் மையங்கள் அமைப்பது தொடர்பாக தமிழகஅரசு விதிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை, முக்கிய மற்ற்ம் இதர சாலைகளில் பெட்ரோல் விற்பனை நிலையம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கான இடைவெளி மற்றும் தடையில்லா சான்று பெறுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கிராமப்புற மாநிலச் சாலைகளில் 300 மீட்டர் இடைவெளியிலும், சுங்கச்சாவடி, ரயில்வே லெவல் கிராசிங் உள்ளிட்ட பகுதிகளில் 500 மீட்டர் இடைவெளியிலும், 2 பெட்ரோலிய விற்பனை நிலையங்களுக்கு இடையில் கிராமம், நகரம், மலைப்பகுதி மாநில நெடுஞ்சாலையில் 300 மீட்டர் இடைவெளி உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருள் விற்பனை நிலையம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்காக தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம்…!