சென்னை: அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை அபகரித்துள்ள திமுக எம்.பி. கலாசாமி உடனே நிலத்தை காலி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை திமுக எம்.பி. வீராசாமி அபகரித்திருந்த நிலையில், அதை காலி செய்ய வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் வலியுறுத்தி வந்தது.
ஆனால், முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனும், திமுக எம்.பி, அந்த இடத்தில் மருத்துவமனை கட்டி, கல்லா கட்டி வந்தார். மேலும் நிலத்தை காலி செய்ய மறுத்து வந்தார். இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த புறம்போக்கு நிலத்தை 1995 ஆம் ஆண்டு கலாநிதி வீராசாமியின் குடும்பத்தினர் வாங்கியதாகவும் அந்த நிலம் வருவாய்ப் பதிவேட்டில் கிராம நத்தம் (பொது கிராம நிலம்) என வகைப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், அதன் மீது அரசு உரிமை கோர முடியாது என்றும் வாதிடப்பட்டது. தற்போது அந்த இடத்தில், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மருத்துவமனை கட்டி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணையின்போது, விசாரணை நடத்திய நீதிபதி சுப்பிரமணியனம், கலாநீதி வீராசாமி மருத்துவமனை கட்டியுள்ள இடமானது, அரசு புறம்போக்கு இடம் என்பதும், அது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், திமுக எம்.பி., கலாநிதி வீராசாமி அந்த இடத்தை காலி செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டது., அதற்காக அக்டோபர் 10-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. கிராம நத்தம் நிலம் என்பது வீடில்லா ஏழை மக்களுக்கு வழங்கவே ஒதுக்கப்பட்டது. எனவே அந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது.
மனுதாரர் எம்.பி.யாக உள்ளதாலும், அவரது தந்தை தமிழக முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார் என்பதாலும், அவர் நிலமற்ற ஏழை அல்ல என கடுமையாக விமர்சனம் செய்த நிதிபதி, தமிழகத்தில் சமூக நீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு கவுரவம் வழங்க வேண்டும். எனவே கலாநிதி வீராசாமி எம்பி ஒரு மாதத்தில் நிலத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை அப்புறப்படுத்தி, நிலத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். அத்துடன் அந்த வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.