சென்னை:
அரசு வேலை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார்கள் குவிந்து வருகின்றன.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 17ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. விருதுநகரில் நடைபெற்ற அதிமுக-வின் கண்டன ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வெவ்வேறு வாகனங்களில் அவர் மாறிமாறி சென்றுள்ளதாகக் கூறி, அவரை பிடிக்க 8 தனிப்படைகள் காவல்துறை தரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு, சென்னை, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடிவருகின்றனர். தற்போது அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸூம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் புகார் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel