சென்னை,

மிழக அரசு அலட்சியம் காரணமாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.  டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் செயலற்ற தன்மையால், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி வருகிறது.

இதன் காரணமாக பல்வேறு மர்ம நோய்கள் பரவி வருகிறது.

இதற்கிடையில், , மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு டெங்கு போன்ற மர்ம காய்ச்சலை தடுக்க கொசு ஒழிப்பை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கில், தமிழகத்தில் டெங்கு காரணமாக 15 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் கூறியிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில்  கொசு ஒழிப்பு நடவடிக்கையில் அரசு தீவிர கவனம் செலுத்தத் தவறியதன் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் காரணமாக பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 47 பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பல இடங்களில்,டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நிலவேம்பு கசாயம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.