சென்னை: தமிழ்நாட்டில், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் பேருந்துகள் கலர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கான விவரம் வெளியாகி உள்ளது.

அதுபோல  பள்ளி வாகனம், ஆட்டோ, தனியார் ஆட்டோ உள்பட வாகனங்களின் நிறம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதுமுதல், அனைத்து துறைகளிலும் அதிரடியாக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து துறையிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்உள்பட  பல அறிவிப்புகளை வெளியிட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கி உள்ளார்.

இதையடுத்து, பெண்களுக்கான இலவச பயணம் பேருந்து எது என்பதை எளிதில் அடையாளம் காணும் வகையில் பேருந்துகளின் நிறத்தை மாற்ற தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.ங

இது தொடர்பாக செய்தியளார்களிடம் பேசிய தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி பேருந்துகள் விரைவில் கலர் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்ல.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  தலைமையிலான திமுக  ஆட்சி காலத்தில் தான், போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது . அதைத்தொடர்ந்து,   நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டம், பெண்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த பேருந்துகளில்  திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் பேருந்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் நிறமாற்றம் செய்வது குறித்து முதல்வருடன்  கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பேருந்துகள், ஆட்டோ,  தனியார் ஆட்டோ, பள்ளி வாகனங்களுக்கு கலர் மாற்ற தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,

மினி பஸ்: புதினா பச்சை

ஆட்டோ: மஞ்சள்

தனியார் ஆட்டோ: வானம் நீலம்

கல்வி  நிறுவனம்: முழு மஞ்சள்

இ-ஆட்டோ: பாட்டில் பச்சை

சிவப்பு: அஞ்சல் வேன்கள், தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட வாகனங்கள்.

பாதுகாப்பு துறை வாகனங்கள்: ஆலிவ் பச்சை அல்லது கடற்படை நீலம்

பொருட்கள்  எடுத்துச்செல்லும் லோடு வாகனங்கள் நெடுஞ்சாலை மஞ்சள் நிறத்தில் முழுமையாகவோ அல்லது முன் மற்றும் பின்புற பகுதிகளிலோ வரையப்பட வேண்டும்.

இந்த கலர் மாற்றம், தேசிய அனுமதிப்பத்திரத்தின் கீழ் வரும்  வாகனங்கள், பொலிஸ், சிறைச்சாலைகள் மற்றும் வனத்துறைகளுக்குச் சொந்தமான பொருட்கள் வாகனங்கள் மற்றும் சவக்கிடங்கு வேன்களுக்கு இந்த விதி பொருந்தாது என்றும், இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை, அரசின் முகவரிக்கு எழுதலாம் என்றும்  மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.