அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கினர். நாளை முதல் வேலை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டாலும், இன்று மதியத்தில் இருந்தே பேருந்துகளை பணிமணைகளிலி் நிறுத்தத் துவங்கினர்.
குறிப்பாக நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை, தேனி, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடக்கி உள்ளனர். பணிமனையில் அரசு பேருந்துகளை நிறுத்திவிட்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்லவன் பணி மனையில் பேருந்துகளை நிறுத்தத் துவங்கியுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.