தமிழ் சினிமாவில் ஜாம்பவான் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணி தற்போது கொரோனாவை பற்றி தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்! என்ற பதிவை போட்டுள்ளார். கவுண்டமணிக்கு ட்விட்டர் அக்கவுண்ட் இருக்கிறதா என்பது சந்தேகமாக இருந்தாலும் இந்த பதிவு அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

https://twitter.com/itisGoundamani/status/1395999304074989568