திமுக கூட்டணியில் கேட்ட 3 தொகுதிகள் கிடைத்து உள்ளது: காதர் மொய்தீன் பேட்டி

Must read

சென்னை: திமுக கூட்டணியில் கேட்ட 3 தொகுதிகள் கிடைத்து உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி உள்ளன.

இந் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:  நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்து உள்ளது. இதனை அறிவிக்கக்கூடிய பொறுப்பை ஸ்டாலின் செய்வார். மேலும், எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. நாளை விருப்பமனு பெறப்பட்டு அதற்கு அடுத்த நாள் நேர்காணல் செய்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

More articles

Latest article