கூகுள் குரல் தேடலில் (Google voice search) தமிழும் இடம்பெற்றுள்ளது. அதனுடன் மேலும் 7 இந்திய மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
வலைவாசிகளுக்கு ஊன்றுகோலாக இருப்பது கூகுள். அதன் தேடல் பொறியில் நமக்கு தேவையானவற்றை டைப் செய்து எளிமையாக, நாம் நாம் எதிர்பார்ப்பதை அடையலாம். அதன் அடுத்தக்கட்டமாக குகூள் வாய்ஸ் சர்ச் (Google voice search) ஐயும் கூகுள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியது.
இன்றைய இளைஞர்களும் கூகுள் தேடலில் டைப் செய்து தேடுவதைவிட குரல் வழியில் தேடுவதையே பெரிதும் விரும்புகிறார்கள்.
ஆனால் தற்போது வரை இந்தியர்கள் ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் தான் நாம் கூகுள் குரல் வழியில் தேடும் நிலை இருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களின் ஆசையையும் நிறைவேற்றும் வகையில் மேலும் 8 மாநில மொழிகளை தேடல் பொறியில் இணைத்து பெருமைபடுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.
நேற்று இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, தமிழ், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி, உருது ஆகிய 8 மொழிகளையும் இணைத்துள்ளது.
இதுவரை இந்திய மொழிகளுக்காக 5 தடவை கூகுள் தனது தேடுதல் பொறியை மாற்றி அமைத்துள்ளது.
இத்துடன் சேர்ந்து கூகுள் வாய்ஸ் சர்ச் பொறியில், 119 மொழிகள் கூகுள் தேடலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.