சான்ஃப்ரான்சிஸ்கோ

கூகுள் நிறுவனம் நேற்று பிக்ஸல் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் லாப்டாப், ஸ்பீக்கர்கள் போன்ற தனது தயாரிப்புகளை விற்பனைக்கு வெளியிட்டது

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐஃபோன்களை வெளியிட்டது தெரிந்ததே. தற்போது அதை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஸ்மார்ட் ஃபோன்கள், லாப்டாப், ஸ்பீக்கர்கள் போன்ற பொருட்களை விற்பனக்கு வெளியிட்டுள்ளது.

கூகுள் பிக்ஸல் 2 ஸ்மார்ட் ஃபோன்கள் இரண்டு அளவில் வருகின்றன.  இவைகள் அலுமினியத்தால் செய்யப்பட்டவை.   இயர் ஃபோன் ஜாக்குகள் இல்லாமல் ஒயர்லெஸ் முறையில் வெளி வந்துள்ளது.  இந்த ஃபோனின் பேசிக் மாடல் 649 அமெரிக்கடாலருக்கும்,  மேம்படுத்தப்பட்ட மாடல் 849 அமெரிக்க டாலருக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.  வரும் அக்டோபர் 19 முதல் இவை விற்பனைக்கு வருகிறது.

பிக்ஸல் புக் என அழைக்கப்படும் லாப்டாப் விலை 999 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  இந்த லாப்டாப்பின் கீ போர்ட், மானிட்டரின் பின் பக்கத்தில் மடித்து வைக்கக் கூடிய வசதியுடன் வருகிறது.   மடித்து வைக்கப்பட்டால் இது ஒரு பெரிய டாப்லெட் போல தோற்றமளிக்கும்.  இது வரும் அக்டோபர் 31 முதல் விற்பனைக்கு வர உள்ளது.

மற்றும் இத்துடன் கூகுள் ஸ்பீக்கர்கள், ஒயர்லெஸ் இயர் ஃபோன் ஆகியவையும் விற்பனைக்கு வர உள்ளது.   சந்தையில் கூகுள் என்னும் பெயருக்கு உள்ள மதிப்பை பயன்படுத்தி இந்த நிறுவனம் விரவில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சரியான போட்டியாக மாறக் கூடும் என எலெக்டாரானிக் சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.