சைபர்சிடி
கூகுள் நிறுவனம் தனது 18 வயதுக்குட்பட்ட பயனாளிகளுக்குத் தேடுதலில் படங்களை அகற்ற வழி செய்துள்ளது/
கூகுள் வலைத்தளம் ஒரு புகழ்பெற்ற தேடு தளமாக உள்ளது. அனைத்து வகையான தேடுதல்களும் இங்கு எளிதாகவும் வெற்றிகரமாகவும் நடப்பதால் இதை அனைத்து வயதினரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும் இந்த தேடுதல் தளம் மூலம் 18 வயதுக்குக் குறைவானோர் பல விதமான படங்களைத் தேடிப் பார்ப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக தற்போது உலகெங்கும் ஆன்லைன் வகுப்புக்கள் நடப்பதால் அனைத்து மாணவர்களும் கணினி அல்லது அலைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துவது இன்றி அமையாதது ஆகி உள்ளது. எனவே கூகுள் நிறுவனம் வரவிருக்கும் வாரங்களில் ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கடந்த புதன்கிழமை அறிவித்தது.
இதன் மூலம் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் கூகுள் படத் தேடல்களில் இருந்து தேவையற்ற படங்களை அகற்றக் கோரிக்கை அளிக்க முடியும். மேலும் 18 வயதுக்குக் குறைவான பயனர்களின் கணக்குகள் வைத்திருக்கும் போது அவற்றின் இருப்பிட விவரங்களைக் கூகுள் முடக்கி வைக்கும்.
மேலும் கூகுள் நிறுவனம், “பயனர்களின் பாதுகாப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் கொள்கைகள் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூகுள் கணக்கை உருவாக அனுமதிக்கவில்லை. ஆயினும் பதின்ம வயதினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தேடுதல் செய்ய அனுமதித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.