வாஷிங்டன்:
டிக்டாக் ஆப்-ஐ போலவே இருக்கும்  மிட்ரான் ஆப்-ஐ  ரிமூவ் செய்தது ஏன்?  என்று கூகிள் விளக்கம் அளித்துள்ளது.


கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து  சில நாட்களுக்கு இரண்டு பிரபலமான ஆப்-கள் நீக்கப்பட்டன.  மிட்ரான் மற்றும் சீனா தயாரித்த ஆப் ஒன்றும் நீக்கப்பட்டது. இந்த இரு ஆப்-களும் கூகுள் பிளே ஸ்டோரின் விதிமுறைகளை மீறுவதாக இருந்ததை அடுத்து நீக்கப்பட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூகிள் நிறுவனம் தனது பிளாக்கில், இந்த ஆப்-களை நீக்கியது ஏன்? என்பதை தெளிவாக விளக்கியுள்ளது. அந்த பதிவில், இந்த இரு ஆப்-களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்றாலும் அண்மையில் வெளியான இரண்டு ஆப்-கள் என்றே குறிப்பிட்டுள்ளது.

கூகிள் நிறுவனம் ஏன் இந்த ஆப்-களை நீக்கியது என்பது குறித்த முழு தகவல்களையும் இங்கே காணலாம்.   

கூகிள் நிறுவனத்தால் நீக்கப்பட்ட முதல் ஆப், மிட்ரான் ஆப் ஆகும்.  மிட்ரான் ஆப் பாகிஸ்தானுடன் தொடர்புடையது மற்றும் தேசி டிக்டாக் போலவே இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ஆப்-பின் சோர்ஸ் கோடுகள் அனைத்தும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான தொழில்நுட்ப விதிமுறை மீறல்கள் இந்த இருப்பதாலேயே மிட்ரான் ஆப்-ஐ நீக்கியுள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது. இந்த ஆப்-பில் உள்ள விதிமுறை மீறல்களை தங்கள் நிறுவன டெவலப்பர்கள் உதவியுடன் சரி செய்து வருவதாகவும் கூகிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கூடுதலாக, மிட்ரான் ஆப் மீண்டும் பிளே ஸ்டோரில் இடம் பெறும் என்றும் கூகிள் நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கூகிள் நிறுவன வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆப்-பில் உள்ள பிழைகள் சரி செய்யப்பட்ட பின்னர், மீண்டும் பிளே ஸ்டோரில் இடம் பெற செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகிள் நிறுவனத்தால் நீக்கப்பட்ட 2-ஆவது ஆப், ரிமூவ் சீனா ஆப்-கள்

சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருப்பதால், இந்த ஆப் மிகவும் பிரபலமானது.  இந்த ஆப்-ஐ நீக்கியுள்ளது குறித்து விளக்கம் அளித்த கூகிள் நிறுவனம், இந்த ஆப்-பின் பெயரை மட்டும் பார்த்து நீகக்கவில்லை. இந்த ஆப் நீக்கப்பட்டதற்கு நிறுவன கொள்கைகளை மீறியதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பு ஆப்-களை தவிர்த்து விடும் கூகிள், இதுபோன்ற ஆப்-களை பயனாளர்கள் பயன்படுத்துவதையும் ஊக்கப்படுத்துவதில்லை.

இதுகுறித்து தனது பிளாக் போஸ்டில் குறிப்பிட்டுள்ள கூகிள், மூன்றாம் தரப்பு ஆப்-களை சில மாற்றங்களுடன், சில அம்சங்களை தவிர்த்து விட்டுமே பயனாளர்களை பயன்படுத்த அனுமதிக்கிறோம். இதுபோன்ற மாற்றங்களை அனுமதிக்காத மூன்றாம் தரப்பு ஆப்-களை பயன்படுத்த எங்கள் பயனாளர்களை ஊக்கப்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.  ஆரோக்கியமான போட்டியை எதிர்கொண்டு, தங்கள் டிசைன் மற்றும் புதுமையான அம்சங்களை கொண்ட ஆப்-களை மட்டுமே எங்கள் பயனாளர்களுக்கு வழங்குவதே எங்கல் நோக்கமாகும் என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.

ரிமூவ் சீனா ஆப்ஸ் என்ற ஆப், மற்ற சிறப்பு ஆப்களை குறிவைத்தே உருவாக்கபப்ட்டுள்ளதாகவும் கூகிள் தெரிவித்துள்ளது. இது போன்ற ஆப்-கள் நமது சமூதாய டெவலப்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இல்லை. கூகிள் அமல் படுத்தியுள்ள கொள்கைகள், மற்ற நாடுகளில் உள்ளதை போன்று நிலையானதாக இருக்கிறது என்றும் கூகிள் கூறியுள்ளது