பாரிஸ்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிரச்சினை சந்தித்து பேசினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 10-ம் தேதி முதல் செயற்கை நுண்ணறிவு மாநாடு தொடங்கி நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். அன்றிரவு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், அவருக்கு விருந்து அளித்தார்.
AI செயல் உச்சி மாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து பிரதமர் மோடி தலைமை தாங்கினார். பிப்ரவரி 6-7 தேதிகளில் அறிவியல் தினங்களுடன் தொடங்கிய ஒரு வார கால உச்சிமாநாடு, அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-9 தேதிகளில் கலாச்சார வார இறுதியாக நடைபெற்றது. இதில், உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்ட உயர்மட்டப் பிரிவில் நிறைவடைந்தது.
2-வதுநாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இணை தலைமை ஏற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், உலகம் AI யுகத்தின் விடியலில் இருப்பதாகவும், இந்த தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கான குறியீட்டை வேகமாக எழுதி நமது அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை மறுவடிவமைத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
“ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பறிபோகாது. புதிய வகை வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இளம் தலைமுறை யினருக்கு திறன்சார் பயிற்சி வழங்க வேண்டும். உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ஏஐ தொழில்நுட்ப நிபுணர்கள் மிக அதிகமாக உள்ளனர். இப்போது ஏஐ தொழில்நுட்ப யுகத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களைவிட இயந்திரங்கள் புத்திசாலிகளாக மாறிவிடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் திறவுகோல் நம்மிடமே இருக்கிறது. இந்த பொறுப்புணர்வு நம்மை சரியான பாதையில் வழிநடத்தும்.
மனித வரலாற்றில் ஏற்பட்ட தாக்கத்தின் அடிப்படையில், மற்ற தொழில்நுட்ப மைல்கற்களிலிருந்து AI மிகவும் வேறுபட்டது என்பதை வலியுறுத்திய அவர், பகிரப்பட்ட மதிப்புகளை நிலைநிறுத்தும், அபாயங்களை நிவர்த்தி செய்யும் மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நிர்வாகம் மற்றும் தரநிலைகளை நிறுவுவதற்கான கூட்டு உலகளாவிய முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
நிர்வாகம் என்பது ஆபத்துகளை நிர்வகிப்பது மட்டுமல்ல, புதுமைகளை ஊக்குவிப்பதும், உலகளாவிய நன்மைக்காக அதைப் பயன்படுத்துவதும் ஆகும் என்றும் அவர் மேலும் கூறினார். இது சம்பந்தமாக, அனைவருக்கும், குறிப்பாக உலகளாவிய தெற்குப் பகுதியினருக்கு AI அணுகலை உறுதி செய்வதை அவர் வாதிட்டார்.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது ஒரு யதார்த்தமாக மாறும் வகையில் தொழில்நுட்பத்தையும் அதன் மக்களை மையமாகக் கொண்ட பயன்பாடுகளையும் ஜனநாயகப்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். சர்வதேச சூரிய சக்தி கூட்டணி போன்ற முன்முயற்சிகள் மூலம் இந்தியா-பிரான்ஸ் நிலைத்தன்மை கூட்டாண்மையின் வெற்றியைக் குறிப்பிட்ட பிரதமர், புத்திசாலித்தனமான மற்றும் பொறுப்பான எதிர்காலத்திற்கான ஒரு புதுமை கூட்டாண்மையை உருவாக்க இரு நாடுகளும் கைகோர்ப்பது இயல்பானது என்று கூறினார்.
திறந்த மற்றும் அணுகக்கூடிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அதன் 1.4 பில்லியன் குடிமக்களுக்கு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் வெற்றியை பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் AI மிஷன் பற்றிப் பேசிய பிரதமர், இந்தியா, அதன் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, AI க்காக அதன் சொந்த பெரிய மொழி மாதிரியை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். AI இன் நன்மைகள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்தியா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அடுத்த AI உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும் என்று பிரதமர் அறிவித்தார். பிரதமரின் முழு உரையையும் இங்கே காணலாம் [தொடக்க உரை; முடிவுரை]
இந்த உச்சிமாநாட்டில் உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்காக AI உள்கட்டமைப்பை அதிக அளவில் அணுகுதல், AI இன் பொறுப்பான பயன்பாடு, பொது நலனுக்காக AI, AI ஐ மிகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் நிலையானதாகவும் மாற்றுதல் மற்றும் AI இன் பாதுகாப்பான மற்றும் நம்பகமான நிர்வாகத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கியமான கருப்பொருள்கள் குறித்த விவாதங்கள் இடம்பெற்றன.
பாரிஸை தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான அடுத்த சர்வதேச மாநாடு இந்தியாவில் நடத்தப்படும்.” என்று கூறினார்.
இந்த மாநாட்டில் மாநில மற்றும் அரசுத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், முக்கிய AI நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற சிறப்புமிக்க பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை கூகுள் நிறுவன சிஇஓ சந்தித்து பேசினார். அவர், பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாரிஸில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமரை சந்தித்தேன். ஏஐ தொழில்நுட்பம் இந்தியாவுக்குக் கொண்டுவரக் கூடிய வியத்தகு வாய்ப்புகள் பற்றியும், எப்படி கூகுள் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்துக்கு பங்களிக்க முடியும் என்பது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.