த்திரமேரூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர் கோவில் புனரமைப்பின் போது தங்க  ஆபரணங்கள், நாணயங்கள் என புதையல் கிடைத்துள்ளது.

இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோவில் ஒன்றில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் உள்ளது.  இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் மக்களும் கோவில் விழாக்குழுவினரும் முடிவு செய்துள்ளனர்.  இந்த பணியை வருவாய்த்துறை அனுமதி இன்றி அவர்கள் தொடங்கியதாக கூறப்படுகிறது.

புனரமைப்பின் ஒரு கட்டமாகக் கோவில் கருவறை நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கல் படிகளை ஜேசிபி மூலம் அகற்றினர்.   அந்நேரத்தில் அதன் கீழ் கிடந்த துணியால் சுற்றப்பட்ட சிறு மூட்டையில் தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   இதில் சுமார் 100 சவரன் தங்க நகைகள் இருந்ததாகவும் அதில் சிலவற்றைப் பொதுமக்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் கோவிலுக்கு சென்று பொதுமக்களிடம் இருந்து நகைகளைக் கைப்பற்றி மதிப்பீடு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,  இந்த கோவிலில் கடந்த 16 ஆம் நூற்றாண்டில் அன்னியர் படையெடுப்பு காரணமாக நகைகள் மற்றும் நாணயங்களைக் கோவிலின் பல்வேறு பகுதிகளில் புதைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.  இந்த இக்கோவிலில் சில அரிய தெய்வ விக்கிரகங்களை தற்போது காணவில்லை என்னும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.