தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 1480 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 69,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலையை நிர்ணயிக்கும் நிலையில் இந்தியா எந்த நாளும் இல்லை என்ற போதும் அதை வாங்கும் மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.

உலக வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது யார் என்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த சில வாரங்களாக கடும் போட்டி நிலவும் நிலையில் இருநாடுகளும் மாறி மாறி உலக பொருளாதாரத்தை சீரழித்து வருகிறது.

இதனால் விலைவாசி உயரும் என்று எதிர்பார்க்கப்படும் என்று கூறப்படும் நிலையில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 4,160 உயர்ந்துள்ளது.

8ம் தேதி சவரனுக்கு ரூ. 65,800 என்று இருந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 8745 என்று விற்கப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.