சென்னை: சென்னை  விமான நிலையத்தில் சமீப மாதங்களாக தங்கக்கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக நடை பெற்றுள்ள தங்கக்கடத்தலில்,  சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் துணைபோயுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று துபாயில் இருந்து சென்னை  திரும்பிய விமானத்தில்  வெளிநாட்டு பணம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான நடத்திய சோதனையில், சென்னை  திருவல்லிகேணியை சேர்ந்த முகமது உசேன் (வயது 30) என்பவர் கைது செய்யப்ப்டடார். அவரிடம் இருந்து,  ரூ.19 லட்சத்தி 68 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஏற்கனபே வெளிநாட்டு கரன்சிகள், போதைப்பொருட்கள், தங்கம் போன்றவை அடிக்கடி கடத்தி வரப்படும் நிலையில், சிலர் மட்டுமே ஒப்புக்கு சப்பானியாக சிக்க வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த  ஏப்ரல் 9ந்தேதி சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கால் பாதத்தில் மறைத்து கடத்தி வந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில்,  சென்னையை சேர்ந்த 30 வயது இளைஞர்  கால்களில் அணிந்திருந்த செருப்புகளில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து,  மே 09ந்தேதி, சென்னை விமான நிலையத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்ததுகண்டுபிடிக்கப்படடது. அவர் வைத்திருந்த, வெள்ளி முலாம் பூசிய சிறிதும், பெரிதும் என நட்டு, போல்டுகளை கழற்றி சரி செய்ய உதவும், 6 ஸ்பேனர்கள் இருந்துள்ளன.  அவற்றை ஆய்வு செய்ததில் உண்மையில் 24 காரட் தங்கம் என தெரிய வந்துள்ளது. அவற்றின் எடை 1.020 கிலோ இருந்துள்ளது.  அவற்றின் மதிப்பு ரூ.47.56 லட்சம் என கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 81 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பேட்டரி கார் டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.  இவருக்கு விமான நிலையத்தில் பணியாற்றி வந்த பேட்டரி கார் டிரைவர் மோகன் என்பவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

சென்னை விமான நிலையம் மூலம் தினசரி தங்கம் கடத்தப்பட்டு வருவதாகவும்,  விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் துணையுடன் தினமும் நடக்கும் மறைமுக தங்க கடத்தல் நடைபெற்று வருகிறது என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஆனால், மக்களையும், அரசாங்கத்தையும் ஏமாற்றும் வகையில், அவ்வப்போது சிறு சிறு கடத்தல் சம்பவங்களை மட்டுமே வெளி உலகுக்கு தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில்தான், தற்போது இலங்கை வியாபாரிகள் துபாயிலிருந்து  சுங்க வரி செலுத்தி கொண்டு வந்த 7 கிலோ தங்கத்திக்கும் லஞ்சம் கேட்க கொதித்து போன இலங்கை வியாபாரிகள் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

கடந்த வாரம், இலங்கை வியாபாரிகள் 5 பேர் துபாயிலிருந்து வியாபாரம் விஷயமாக 7 கிலோ தங்கத்தை, சுங்கவரி செலுத்தி கொண்டு வந்துள்ளனர். இவர்­களில் ஒரு­வ­ரான ஷாகுல் ஹமதன் இஹ்­சா­ஹுல் ஹக் (24),  அமீ­ருல் அசார் முக­மது சஹர், 35, நஜாத் ஹபி­பீ­புத் தம்பி, 35, நஜ்­மு­தீன் முக­மது சுகி, 32, அனீஸ் அஜ்­மல், 32, ஆகி­யோ­ரும் இலங்­கை­யில் உள்ள நகை­வி­யா­பா­ரி­டம் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் கொண்டு வந்த தங்கத்தை  பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அதை திருப்பி கொடுக்கவில்லை.

ஜூன் 3ஆம் தேதி நள்­ளி­ரவு 12.30 மணிக்கு கொழும்பு இணைப்பு விமா­னம் புறப்­ப­டு­வ­தற்­குள் தங்­கம் திருப்­பித் தரப்­படும் என்று உறு­தி­ய­ளித்த அதி­கா­ரி­கள், அதன் படி நடந்­து­கொள்­ள­வில்லை. தங்­கத்தை திருப்­பித் தரக் கேட்­ட­போது நாட்­டை­விட்டு கிளம்­பும்­படி மிரட்­டி­னார்­கள்,” என்று கூறி­னார். இதனால், அதிர்ச்சி அடைந்த இலங்கை வியாபாரிகள் கடந்த ஒரு வாரமாக, விமான நிலையத்தில்  உள்­ளி­ருப்புப் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக,  சுங்கத்துறை அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளர்.  இதுகுறித்து கூறிய  அவர்களது வழக்­க­றி­ஞர் ஷாகிர் ஹுசைன், இங்­குள்ள சுங்­கத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு இணைப்பு விமானப் பய­ணி­க­ளின் தங்­கத்தை பறி­முதல் செய்ய உரிமை இல்லை என்று கூறினார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தை சென்றடைந்துள்ள நிலையில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் உடந்தையுடன்  தங்கக்கடத்தல் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில், வெளிநாட்டு தூதரகம் பெயரில் தங்கம் கடத்தல் செய்யப்பட்ட சம்பவம் கடந்த இரு ஆண்டுகளாக சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்,  சென்னை விமான நிலையமும் சுங்கத்துறை அதிகாரிகளின் உடந்தையுடன்  தங்கக்கடத்தல் கேந்திரமாக செயல்படுகிறதோ என்ற எண்ணத்தை பொதுமக்களிடையே தோற்றுவித்துள்ளது.