சென்னை:  கடந்த சில தினங்களாக இறக்கத்துடன் விற்பனையாகி வந்த  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. இது  நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின்  ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 22 கேரட் தங்கம்  கிராம் விலை நேற்று முன்தினம்  ரூ. 100  குறைந்து 52850 ரூபாயாக  இருந்தது. அதுபோல,   ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து. ஒரு கிராம் 5,285 ரூபாய்க்கும்,  சரவன் 42,280 ரூபாயாக  இருந்து. அதுபோல  ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 73,000 ரூபாயாக இருந்தது.

இந்த நிலையில்  இன்று தங்கத்தின் விலை  அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,305 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 42,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 5,775 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 46,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.74.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 74,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதிரடியாக சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் மீதான முதலீடுகள் குறைந்தது மட்டும் அல்லாமல் தங்கத்தை விற்பனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில்  தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது.