தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து கிராம் ஒன்று ரூ. 9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரன் ஒன்றுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 72,120க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ. 9000த்தை தாண்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக ஒரு கிராம் வெள்ளி ரூ. 110 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 111 ஆக விற்பனை செய்யப்படுகிறது.