சென்னை: தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக பவுன் ரூ.78,000-ஐ கடந்துள்ளது. இது சாமானிய மக்களின் வயிற்றில் இடியை இறக்கி உள்ளது.  நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சிகரத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கிறருது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து  ஒரு சவரன் தங்கம்  ரூ.78,440–ஐ கடந்துள்ளது. இது  நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு உள்​ளிட்​டவை காரண​மாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு சரிந்து வரு​வ​தால், பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளவர்​கள் தங்​கத்​தில் முதலீடு செய்து வரு​கின்​றனர். இதனால், பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வரு​வதுடன், தங்​கத்​தில் முதலீடும் அதிகரித்து வரு​கிறது. இதன் காரண​மாக, தங்​கத்​தின் விலை​யும் அதி​கரித்துக் கொண்டே வரு​கிறது.

கடந்த ஜனவரி மாத தொடக்​கத்​தில் ஒரு பவுன் தங்​கம் ரூ.58 ஆயிர​மாக இருந்​தது. பின்​னர், போர் பதற்​றம் உள்ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஆக.8-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.75,760 என்ற உச்​சத்தை அடைந்​தது. தொடர்ந்து ஏற்றம் இறக்கமாக காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த ஆண்டு இறுதி வாரம் முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

2025 ஆகஸ்டு 29ந்தேதி அன்று இந்திய வரலாற்​றில் முதல்​முறை​யாக தி தங்​கம் பவுன் விலை ரூ.76 ஆயிரத்தை கடந்து நகை வாங்​கு​வோரை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கியது. அன்றுமுதல் இன்றுவரை உயர்ந்துகொண்டே வரும் தங்கத்தின் விலையானது,  செப்டம்பர் 1-ம் தேதி  மேலும்,   அதி​கரித்து பவுன் ரூ.77 ஆயிரத்தை முதல்​முறை​யாக எட்டியது.

இந்த நிலையில் இன்று (செப்.3) தங்கம் விலை ரூ.78 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,805-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம் வெகு விரைவில் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது.