சென்னை:

ங்கத்தின் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகிறது.இன்று ஒரே நாளில்  சவரனுக்கு ரூ. 872 உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரம் மட்டுமே ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது.

இந்திய பொருளாதாரம் சீரழிவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்றவற்றால், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வருகிறது. 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி பதவி ஏற்றது முதலே வேலைவாய்ப்பு பறிபோன நிலையில், தங்கத்தின் விலையும் வரலாறு காணத அளவில் விலை உயர்ந்து வருகிறது.

2013ம் ஆண்டு வரை சவரன் தங்கத்தின் விரை ரூ.28ஆயிரத்துக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஆண்டுகளில்  தொடர்ந்து வலை ஏறி வருகிறது. தற்போதைய விலை உயர்வு கொரோனா வைரஸ் காரணம் என்று கூறப்பட்டாலும், இந்தியா பொருளாதார வீழ்ச்சிதான் உண்மையான காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

பங்கு சந்தைகளில் பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

கடந்த 4ந்தேதி (2020, மார்ச் 4ந்தேதி)  தங்கம் விலை வரலாறு காணாத அளவில் சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று (6ந்தேதி) சரவனுக்கு ரூ. 872  உயர்ந்து, சவரன்  ரூ. 33 ஆயிரத்து 224 ஆக  உயர்ந்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று ஒரு பவுன் ரூ. 32 ஆயிரத்து 976-க்கும், ஒரு கிராம் ரூ. 4,122-க்கும் விற்பனை ஆனது. ஆனால்,  இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 872 உயர்ந்து ரூ. 33 ஆயிரத்து 848-க்கும், கிராமுக்கு ரூ. 109 உயர்ந்து ரூ. 4 ஆயிரத்து 231-க்கும் விற்பனை ஆகிறது.