உலகெங்கும் நாள்தோறும் பத்து கோடிக்கும் அதிகமானோர் விளையாடும் புதிர் விளையாட்டு சுடோக்கு.

ஜப்பானைச் சேர்ந்த மக்கி காஜி என்பவர் இதை 1980 ம் ஆண்டு உருவாக்கினார்.

Sudoku

பள்ளிப்படிப்பை முடித்து அச்சுக் கூடத்தில் வேலைபார்த்து வந்த இவர் உருவாக்கிய பல புதிர் விளையாட்டுகளில் ஒன்று இந்த சுடோக்கு.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு முன்னணி நாளேடுகளில் இடம் பிடித்த இந்த புதிருக்கு விடை காணும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் ஏராளம்.

இந்த புதிரை உருவாக்கிய மக்கி காஜி குடல் வால் புற்றுநோய் காரணமாக தனது 69 வயதில் இன்று காலமானார்.

சுடோக்குவைப் போன்று இவருக்கும் உலகம் முழுக்க பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது, இவரது மரணம் அவர்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.