கோவா:
கோவாவில் 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று கோவா தலைமை தேர்தல் அதிகாரி குணால் தெரிவித்துள்ளார்.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கும், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் பேரவைக்கும் இன்று ஒரேகட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், கோவாவில் 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று கோவா தலைமை தேர்தல் அதிகாரி குணால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகபட்சமாக சன்குலிம் தொகுதியில் 89.64% வாக்குகள் பதிவாகியுள்ளன. தெற்கு கோவாவில் 78% வாக்குகளை விட வடக்கு கோவாவில் அதிகபட்சமாக 79% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்றைய வாக்குப்பதிவில் 14 இவிஎம்கள் மற்றும் 8 பேலெட்டுகள் மாற்றப்பட்டன என்று கூறினார்.