கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் நாளை பதவியேற்பு!

Must read

பனாஜி,

டைபெற்று முடிந்த கோவா தேர்தலில் அறுதிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பாரதியஜனதா ஆட்சி அமைக்கிறது.

புதிய முதல்வராக பாரதியஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாள பதவி ஏற்க உள்ளார்.

நடந்துமுடிந்த  40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபை  தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜா ரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் 17 தொகுதிகளை கைப்பற்றியது. பாரதியஜனதா 13 இடங் களை கைப்பற்றியது. மீதமுள்ள 10 இடங்களை சிறிய கட்சிகள்,  சுயேச்சைகள்  கைப்பற்றினர்.

இந்நிலையில் கோவாவில் ஆட்சி அமைக்க 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. இதன் காரணமாக அங்கு சிறிய கட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும் கடும் மவுசு கூடியது. குதிரை பேரம் நடை பெற்றது.

இந்த குதிரை  பேரத்தில், பாரதிய ஜனதா சிறிய கட்சிகளையும், சுயேச்சைகளையும் வளைத்துள் ளது. அதைத்தொடர்ந்து பா.ஜனதா தலைவர்கள் கோவா கவர்னர் மிருதுளா சின்காவை நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

அதையடுத்து கோவாவின் முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதவி ஏற்க உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், கோவாவில் ஆட்சி அமைக்க மனோகர் பாரிக்கருக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் 15 தினங்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

நாளை மாலை மாலை 5 மணிக்கு பதவி ஏற்பு நிகர்ச்சி நடைபெற இருக்கிறது.

மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக  4வது முறையாக பதவி ஏற்க இருக்கிறார்.  இதற்கு முன்பு 2000 அக்டோபர் முதல் 2002 பிப்ரவரி வரையும், 2002 ஜூன் முதல் 2005 ஜனவரி வரையும் முதல்-மந்திரியாக இருந்தார். 2012 சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று 3-வது முறையாக முதல்வர் ஆனார்.

2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் மத்திய பாதுகாப்பு மந்திரி ஆனார். தற்போது அதில் இருந்து விலகி மீண்டும் கோவா முதல்-மந்திரி ஆகிறார்.

தற்போது, மனோகர் பாரிக்கசர்  சட்டமன்ற உறுப்பினராக இல்லை. எனவே, 6 மாதத்தில் அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக வேண்டும்.

More articles

Latest article