சென்னை
கிண்டி அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த டிசம்பர் 23-ந் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த முடிவு செய்\து. வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று இந்த மனு மீதான விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்ற போதுது. விசாரணை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.