புதுடெல்லி:
லக அளவில் இதுவரை 51.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலக அளவில் உலக அளவில் இதுவரை 51.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கொரோனா பாதிப்புக்கு உள்ளான 47.10 கோடி பேர் குணமடைந்த நிலையில் 62.74 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புதிதாக 77 ஆயிரம் பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஜெர்மனியில் 86 ஆயிரம் பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் இத்தாலியில் இத்தாலி – 43 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.