நெட்டிசன்:

எஸ்.வி.சேகர் அவர்களது முகநூல் பதிவு:

நேற்று இரவு மதுரையிலிருந்து சென்னை வரும்போது திரு ஜிகே வாசன் அவர்களை சென்னை ஏர்போர்ட்டில் சந்தித்தேன். எப்படி வீட்டுக்கு போறீங்கன்னு கேட்டபோது உபர்ல போறேன்னு சொன்னப்போது என் கையைப்பிடிச்சு வாங்க என் கார்ல போலாம்னு அழைச்சுட்டு வண்டில என்னை உக்காரச்சொல்லிட்டு டிரைவரிடம் கட்டிக்கொடியை கழட்டச்சொன்னார்.
சார் கொடியை ஏன் கழட்டச்சொல்றீங்கன்னு கேட்டதுக்கு உங்களுக்கு தேவையில்லத சங்கடங்கள் வராமலிருக்க என்றார்.
அதெல்லாம் பரவாயில்ல சார். கட்சியை தாண்டிய நண்பர் நீங்கன்னேன். சிரித்துக்கொண்டே வேற டாப்பிக் பேசிக்கொண்டே என் வீட்டில் இறக்கி விட்டுச் சென்றார். எப்படியாவது அடுத்த கட்சிக்காரனை ஒரு பிரச்சினைல மாட்டிவிட்டு வேடிக்க பாக்கிற பல கட்சித்தலைவர்களில் வித்யாசமான ஒரு