சென்னை:
திய உணவு திட்டத்துக்கு காமராஜர் மதிய உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன்◌ கோரியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:  ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் நலன் கருதி பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி வைத்த மதிய உணவுத் திட்டம் மத்திய அரசின் நிதி உதவி மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதால் சுமார் 12 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். எனவே பெருந்தலைவர் காமராஜரது 114-வது பிறந்த நாளில் அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மத்திய அரசு மதிய உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். அவருடைய ஆட்சியின்போது தான் அணைகள், கல்விக்கூடங்கள், தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அதே போல் கிராமங்கள் தோறும் கல்வி கூடங்களை திறந்து ஏழை மாணவர்களும் படிப்பறிவு பெற வேண்டும் என எண்ணி அவர்களுக்கு மதிய உணவு கொடுத்து கல்வி போதித்தவர் காமராஜர்.
கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.