சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக  தமாகா சார்பில் 16பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்து, அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

அங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக கூட்டணி சார்பில் கடந்த முறை போட்டியிட்ட தமாகா இந்த முறை போட்டியிட முன்வராமல் அதிமுகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து,  த.மா.கா. சார்பில் 16 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்து கட்சி தலைவர் ஜிகே,வாசன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக நடைபெற இருகின்ற இந்த இடைத்தேர்தலில் த.மா.கா-அ.இ.அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியாற்றுகிறது. எனவே த.மா.கா சார்பில் தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. தேர்தல் பணிக்குழு தலைவர் பி. விஜயகுமார் (ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா தலைவர்) 2. ஆர்.ஆறுமுகம் (த.மா.கா மாநில துணைத் தலைவர்) 3. விடியல் எஸ்.சேகர் (த.மா.கா மாநில பொதுச்செயலாளர்) 4. எம்.யுவராஜா (த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர்) 5. எஸ்.டி.சந்திரசேகர் (த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர்) 6. சி.எஸ்.கவுதமன் (த.மா.கா. மாநில தேர்தல் குழு உறுப்பினர்) 7. வி.பி.சண்முகம் (ஈரோடு தெற்கு மாவட்ட த.மா.கா தலைவர்) 8. பிரகாஷ் ஜெயின் (த.மா.கா மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்) 9. வி.கே.மணியன் (த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர்) 10. சி.சம்பத்குமார் (ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா விவசாய அணி தலைவர்) 11. எஸ்.கே.சின்னுசாமி (த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர்) 12. சுந்தரசாமி (த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர்) 13. உழவன் கொற்றவேல் (த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர்) 14. புவனேஸ்வரன் (ஈரோடு வட்டார த.மா.கா தலைவர்) 15. கே.பி.ரபீக் (ஈரோடு மத்திய மாவட்ட தொழிற்சங்க தலைவர்) 16. ஓ.கே.ஏ. கதிர்வேல் (ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா துணைத் தலைவர்)

தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகள் பணியை சிறப்பாக மேற்கொள்வார்கள் என்று த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.