நியூயார்க்-
அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட்டில் உள்ள எருதுசிலை முன் ஒரு பெண் குழந்தை துணிச்சலாக எதிர்கொள்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும் சிலை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நியூயார்கில் இருக்கும் உலகப்புகழ் வர்த்தக தலமான வாஷிங்டன் ஸ்ட்ரீட்டில் , அதிகார மையங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் செயல்படக்கூடிய ஆளுமைத் திறம் கொண்டவர்கள்.
மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களை அலுவலகங்களில் பணியாற்ற அதிகவாய்ப்புகள் அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெண் குழந்தை ஒன்று ஆவேசத்துடன் தாக்கவரும் எருதை எதிர்கொள்வதை போன்ற சிலையை வெண்கலத்தால் நிர்மாணித்துள்ளனர்.
அச்சப்படாத சிறுமி என்று பெயரிடப்பட்ட அச்சிலை தற்போது புகழ்பெற்ற எருது சிலை முன்பாக நிற்கவைக்கப்பட்டுள்ளது. அந்தச்சிலையை இன்றுகாலையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பெண்களுக்கும் ஆளுமை திறம் உண்டு என்பதை உலகுக்கு சொல்லவே இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பரபரப்பான இடங்களில் ஒன்றான வால்ஸ்ட்ரீட்டில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருப்பதால் கூட்டம் கூட்டமாக மக்கள் பார்த்துச் செல்கின்றனர். சிறுமியுடன் ஷெல்பி எடுப்பவர்கள்தான் அதிகம்.