ஷா ஆலம், மலேசியா
இரண்டு முறை புற்று நோயில் இருந்து மீண்ட ஒரு மலேசியப் பெண் மேல் சிகிச்சைக்காக நடனமாடி நிதி திரட்டுகிறார்.
மலேசிய நாட்டின் ஷா ஆலம் பகுதியைச் சேர்ந்த பெண்ணான நவி இந்திரன் பிள்ளை என்பவருக்கு தற்போது 29 வயதாகிறது. அவருக்குக் கடந்த 2013 ஆம் வருடம் மார்பகப் புற்று நோய் இருந்தது கண்டறியப்பட்டது. அவர் இந்தியப் பாரம்பரிய நடனக்கலைகளில் எடுத்து வந்த பயிற்சியை இந்த நோக்கான சிகிச்சைக்காக நிறுத்த நேரிட்டது.
ஒரு வருடத்தில் குணமடைந்த அவர் தனது நடனப் பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்றார். ஆனால் கடந்த 2018 ஆம் வருடம் அவரை மீண்டும் புற்றுநோய் தாக்கியது. அவருக்கு அப்போது பரவக்கூடிய புற்று நோய் வந்ததால் கல்லீரல் மற்றும் முதுகெலும்பில் புற்று நோய் பரவியது. தான் மீண்டு புற்று நோயில் இருந்து மீள்வோமா என்னும் கவலை இப்போது அவரை மிகவும் வாட்டியது.
அவர் மீண்டும் புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார். ஆயினும் அவர் இனி வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் உள்ளது. இந்த சிகிச்சைக்கு அதிக அளவில் பணம் தேவை என்பதால் அவர் தனது குடும்பத்தினரை தொல்லப்படுத்தாமல் நடனமாடி நிதி சேர்த்து சிகிச்சைக்குச் செலவு செய்ய முடிவு எடுத்துள்ளார்.
அதையொட்டி இந்தப் பெண்ணின் முதல் நிகழ்ச்சி வரும் 12 ஆம் தேதி அன்று தன்வந்திரிம் நிருத்யம் என்னும் பெயரில் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சி கோலாலம்பூரில் உள்ள டெம்பில் ஆஃப் ஆர்ட்ஸை சேர்ந்த சாந்தானந்த் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கட்டுகள் ww.airasiaredix.com என்னும் இணைய தளத்தில் கிடைக்கிறது. டிக்கட்டுகளைப் பெற வாட்ஸ் அப் எண்ணான 010 2219314 ஆகிய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.