காஞ்சிபுரம்
டெங்கு காய்ச்சலால் காஞ்சிபுரத்தில் ஒரு சிறுமி மரணம் அடைந்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளான ஸ்ருதி. அங்குள்ள தனியார்ப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். ஸ்ருதிக்கு. கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக ஸ்ருதிக்கு கடும் காய்ச்சல் அடித்தது.
இதையொட்டி அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில், மாணவிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையொட்டி சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல் நிலை சீராகாததால் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி ஸ்ருதி உயிரிழந்தார். இது அந்த பகுதியில் பெரும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.