போராட்டத்தின் இடையே பிறந்தநாள் கொண்டாடும் சிறுமி : வைரலாகும் ஒளிப்படம்

Must read

முல்லைத்தீவு:

லங்கையில்,  இராணுவத்தினர் ஆக்கிரமித்த நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் பெரும்  போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

முல்லைத்தீவூ பகுதியில் உள்ள கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கடந்த 18 நாட்களாக  போராட்டம் தொடர்கிறது. தற்போது நான்காவது நாளாக புதுக்குடியிருப்ப மக்கள் சுழற்சி முறையில்  உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.  பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ள இந்த போராட்டத்தில்  கதீசனா என்ற சிறுமியும்  கலந்துகொண்டிருக்கிறார்.

சமீபத்தில் சுதீசனா,  தனது பிறந்தநாளையும் போராட்டக்களத்துக்கு நடுவே கொண்டாடியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

“இதுபோன் சிறுவர்களுக்காகவாவது, மக்களின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்கலாமே” என்று பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More articles

Latest article