புதுடெல்லி:

வெறுப்பு அரசியலுக்கு வாக்களிக்காமல் சரிசமமான இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என 200-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிரிஷ் கர்னாட், அருந்ததி ராய், அமிதாவ் கோஷ், பாமா, நயந்தாரா ஷாகல், டிஎம். கிருஷ்ணா, விவேக் ஷன்பாக், ஜீட் தாயில், கே.சச்சிதானந்தன் மற்றும் ரோமிளா தாபர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதில், வெறுப்பு அரசியலுக்கு வாக்களிக்காமல் சரிசம இந்தியாவுக்கு வாக்களியுங்கள். எல்லா குடிமகன்களுக்கும் சமமான உரிமையை நமது அரசியல் சாசனம் வழங்குகிறது.

சுதந்திரமாக உண்ண, பிரார்த்திக்க, ஆசைபட்டபடி வாழ உரிமை உள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமையும் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக நம் மக்கள் சாதி, மதம், பாலின வேறுபாடு, பிராந்திய ரீதியாக பிளவுபட்டு நிற்கின்றனர்.

எனவே, நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் வெறுப்பு அரசியலுக்கு வாக்களிக்காமல், சரிசம இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, உருது, பங்களா,மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.