சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட்டில், இந்திய அணி தனது இரண்டாவது விக்கெட்டை குறுகிய இடைவெளியில் இழந்துவிட்டது. அரைசதம் அடித்த ஷப்மன் கில் ஆட்டமிழந்துவிட்டார்.
சிறப்பாக ஆடிவந்த ஷப்மன் கில், சரியாக 100 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ஆனால், 101வது பந்தை பேட் கம்மின்ஸிடமிருந்து சந்தித்தபோது, கேமரான் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், இந்திய இன்னிங்ஸ் சற்று தடுமாறியுள்ளது.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், இது அவரின் முதலாவது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கேப்டன் ரஹானேவும், புஜாராவும் களத்தில் உள்ளனர். இவர்கள், நிலைத்து நின்று ஆடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவர்களும் விரைவாக விக்கெட்டை இழக்கும் பட்சத்தில், இந்தியா பெரிய தடுமாற்றத்தை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.