கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பெருமைக்கு மேலும் ஓர் மகுடம் சேர்க்கும் வகையில் வாழ்க்கை பரிசு என்ற திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிப்பதாக தெரிவித்து உள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய் சிட்டியுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள சிக்கலான இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு “வாழ்க்கை பரிசு” என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை தென்னிந்தியாவின் குறிப்பிடதக்க மேம்பட்ட மருத்துவமனைகளில் ஒன்றாகும், இது குறைந்த விலையில் அதி நவீன சுகாதார சேவைகளை வழங்குகிறது. கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்தாலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் பல அரிதான உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை தேடி வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று பயனடைகின்றனர். மருத்துவ உதவியை நாடி வருபவர்கள் முகத்தில் புன்னகையுடன் வீடுகளுக்குத் திரும்புவதை என்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்கிறார்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ உதவியை நாடும் அனைவருக்கும் மேம்பட்ட மருத்துவ சேவையை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அத்தகைய தொலைநோக்கு பார்வையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோயம்புத்தூர் சாய் சிட்டியின் ரோட்டரி கிளப் உடன் இணைந்து, உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சையை முற்றிலும் இலவசமாக வழங்குவதை “வாழ்க்கையின் பரிசு” திட்டத்தின் கீழ் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. “வாழ்க்கை பரிசு” திட்டத்தின் மூலம் பல குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அரிய இதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகள் சமீபத்தில் பிலிப்பைன்ஸநாட்டில் இருந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
குழந்தைகள் அனுமதிக்கப்பட்டவுடன், மருத்துவர்கள் உடனடியாக அவர்களின் உடல்நிலையை மதிப்பீடு செய்து, அவர்களின் இதய நோய்க்கான மூல காரணத்தை குழந்தை இருதயநோய் நிபுணர் டாக்டர் தேவபிரசாத் ஆய்வு செய்தார். மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் தேவை என்று அறியப்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சைக் குழு, டாக்டர்.விஜய் சதாசிவம் மற்றும் மயக்க மருத்துவர் டாக்டர் நரேந்திர மேனன் தலைமையில், மூன்று குழந்தைகளுக்கும் சிக்கலான திறந்த இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது.
இது ஒரு சிக்கலான செயல்முறையாக இருந்தபோதிலும், குழந்தைகள் ஒரு வாரத்திற்குள் எந்தவிதமான சிக்கல்கள் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பின் எந்தவிதமான கவலைகள் இல்லாமல் குணமடைந்தனர் மற்றும் இறுதிப் பரிசோதனைக்குப் பிறகு விரைவில் அவர்கள் நாடு திரும்பினார்; மேலும் அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு ஏற்ற நிலையில் உள்ளனர் என்பதையும் உறுதி செய்த பின்னரே குழந்தைகள் மீண்டும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்க்கு சென்றனர். “வாழ்க்கையின் பரிசு” திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் சாய் சிட்டியின் ரோட்டரி கிளப் நிதியுதவியுடன் பயணம் மற்றும் தங்குமிடம் உட்பட முழு சிகிச்சையும் இலவசமாக வழங்கப்பட்டது
கோயம்புத்தூர் மாநகரில் பல மருத்துவமனைகள் இருந்தாலும், பல ஆண்டுகளாக தேவைப்படும் நோயாளிகளுக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்து தரும் சாதனையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை (https://www.sriramakrishnahospital.com/) செய்து வருகிறது. இதுவரை, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அறுபது நோயாளிகளும், இலங்கையைச் சேர்ந்த இருபத்தைந்து நோயாளிகளும், வியட்நாம் மற்றும் கம்போடியாவிலிருந்து இன்னும் பலர் பல்வேறு அரிய மற்றும் சிக்கலான இதய நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சர்வதேச நோயாளிகளுக்கு மிகவும் மேம்பட்ட இருதய சிகிச்சையை வழங்கும் மிகச்சில மெட்ரோ அல்லாத மாநகரங்களில் கோயம்புத்தூர் ஒன்றாகும் என்பதால், இந்த சாதனை கோவை நகரத்திற்கு ஒரு பெரிய மரியாதையாகும். ரோட்டரி கிளப் ஆஃப் சாய் சிட்டி-யின் முதன்மைத் திட்டம் “வாழ்க்கையின் பரிசு” ஆகும், இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, உதவி தேவைப்படும் குழந்தைகளின் சிக்கலான இதயப் பிரச்சனை களுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பற்றி
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 1975 இல் தொடங்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மருத்துவ நிறுவனம். கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை பல வழிகளிலும் சேவைகளாலும் மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. எஸ்என்ஆர் சன்ஸ் தொண்டு நிறுவனத்தால் நிறுவப்பட்டு நடத்தப்படும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. உயிர்க்கொல்லி நோய் பாதிப்புகள் முதல் அன்றாட வியாதிகளுக்கான சிகிச்சைகள் வரை, அதிநவீன தொழில்நுட்பம், அதிநவீன அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கிவரும் மக்களுக்கான மருத்துவமனை ஆகும்.
https://www.youtube.com/c/SriRamakrishnaHospital
https://www.facebook.com/SriRamakrishnaHospital
https://en.wikipedia.org/wiki/Sri_Ramakrishna_Hospital
https://www.instagram.com/ramakrishnahospital/minor-department/paediatric-cardiac-surgery/
https://play.google.com/store/apps/details?id=com.sriramakrishnahospital