இந்தி ‘பிக் பாஸ்’ 13-வது சீசனில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகர் சித்தார்த் சுக்லா. பிக் பாஸ் 13ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து டைட்டில் ஜெயித்தவர்.அவருக்கென்று சமூக வலைதளங்களில் தனிப்பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.

இவர் நடித்த ‘பலிகா வாது’ என்ற தொடர் தமிழில் ‘மண் வாசனை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

இந்நிலையில் இன்று (செப் 02) காலை திடீரென சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

1980 டிசம்பர் 12ம் தேதி பிறந்த சித்தார்த் ஷுக்லாவுக்கு தற்போது 40 வயது மட்டுமே ஆகிறது. இந்த வயதில் அவரது மரணம் பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.