டில்லி:
தாம் பதவியேற்றபோது இந்திய பொருளாதாதம் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. ஆனால் எந்த குறுக்குவழிகளையும் கையாளாமல் தனது அரசு மேற்கொண்ட நேர்மையான நட வடிக்கைகள் இப்போது நிலைமைமுன்னேற்றமடைந்திருக்கிறது என்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
நான் பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் நீங்கள் யாரும் எண்ணிப் பார்த்திராத அளவுக்கு மோசமான திசையில் சென்று கொண்டிருந்தது. அப்படியே விட்டிருந்தால் நாடு முற்றிலும் சீர்குலைந்திருக்கும். எனவே முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் “இதுதான் நமது நாட்டின் பொருளாதார நிலைமை” என்று அனைவருக்கும்தெரியும் வகையில் ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்துவிடலாம் என்றுகூட எனக்கு தோன்றியது.
ஆனால் அப்படி செய்திருந்தால் எனது பெயர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் முதலீட்டாளர்கள் மத்தியிலும், உலகஅரங்கிலும் இந்தியாவின் நன்மதிப்பு முற்றிலும் சீர்குலைந்திருக்கும். அரசியல் என்னை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய உந்தித் தள்ளியது. நாட்டு நலனோ அப்படிச் செய்ய வேண்டாம் என்று என்று தடுத்தது. நான் என் மீதுசுமத்தப்படப்போகும் களங்கத்தை கருத்தில் கொள்ளாமல் நாட்டு நலன் கருதிதான் அப்போது முடிவெடுத்தேன்.
இதுபோன்ற சூழல்களில் குறுக்கு வழிகளைக் கையாண்டு நிலைமையை சரிசெய்ய முயற்சிப்பது பேராபத்தை விளைவிக்கும். எனவே அரசு நேர்மையாகவும் நிதானமாகவும் எடுத்த நடவடிக்கைகள் மூலம் இப்போது மீண்டு விட்டோம். அரசியல் பார்வையில்லாமல் நேர்மையாக பொருளாதார நிலையை ஆராய்பவர்கள் 2014-க்குப்பிறகான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு நிச்சயம் பிரமிப்பார்கள்.
இவ்வாறு அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
Patrikai.com official YouTube Channel