ஜிகா வைரசுக்கும் பார்முலா ஒன் கார் பந்தயத்துக்கும் என்ன ராசியோ தெரியவில்லை நடந்து முடிந்த கடைசி எட்டு சுற்றுக்களில் ஐந்து சுற்றுக்கள் டெக்ஸாஸ், மெக்ஸிகோ, பிரேசில் என்று அனைத்தும் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் நடந்ததாகும்.
race
செப்டம்பர் மத்தியில் நடைபெறவிருக்கும் அடுத்த சுற்றுப் போட்டிகளும் சிங்கப்பூர், மலேசியா போன்ற ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளிலேயே நடக்கவிருக்கிறது.
தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை உலுக்கியெடுத்த ஜிகா வைரஸ் இப்போது சிங்கப்பூரில் பரவிவருவது அனைவரும் அறிந்ததே. இதுவரை 151 பேர் இந்த வைரசால் அங்கு தாக்கப்படுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் கர்ப்பிணிப் பெண்களை தாக்கினால் பிறக்கவிருக்கும் குழந்தை சிறிய தலையுடனும் மூளை பாதிப்புடனும் பிறக்கும். எனவே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தங்கள் நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் யாரும் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளன. இந்த கொடிய வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜிகா வைரஸின் தாக்கம் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் எதிரொலிக்கக் கூடும் என்று தெரியவருகிறது. கார் பந்தய வீரர்களும், ரசிகர்களும் சிங்கப்பூர் பயணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இது அந்த அரசாங்கத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிகா வைரஸ் தாக்குதலை தடுக்க அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.