அமெரிக்க மான்சான்டோவை வாங்குகிறது ஜெர்மனியின் பேயர் நிறுவனம்!

Must read

லகின் மிகப்பெரிய விவசாய பெருநிறுவனங்களில் ஒன்றான  அமெரிக்காவின் முன்னனி விதை உற்பத்தி நிறுவனம் மான்சான்டோ. இந்த நிறுவனத்தை  ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் 6,600 கோடி டாலருக்கு விலைக்கு வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
bayer
பேயர் நிறுவனம் உலகின் முன்னனி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமாகும். ஆஸ்பிரின் மற்றும் அல்கா-செல்ட்ஜெர் போன்ற மருந்துகள் தயாரிப்பது, மேலும் விவசாயத்திற்கு தேவையான ரசாயன பொருட்கள், கலவைகள், உரங்களும் தயாரித்து வருகிறது.
மான்சாண்டோ  நிறுவனம் வேளாண்மைக்கு தேவையான மரபணு மாற்றப்பட்ட விதைகள் தயாரித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய மரபணுமாற்ற விதைகள் சப்ளையர் மான்சான்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
mansontop
இந்த இணைப்பு தொடர்பாக நடந்த பலசுற்று பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
பேயர் மற்றும் மான்சான்டோ இரு நிறுவனங்களுக்கும் இந்தியாவில் பெரிய சந்தை உள்ளது.
ஒரு பங்குக்கு 128 டாலர் என்ற கணக்கில்  6,600 கோடி டாலருக்கு மான்சான்டோ நிறுவனம் பேயரிடம் விலைபோகிறது. இந்த ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய விற்பனை நடவடிக்கை இதுவாகும்.
இந்த நடவடிகை மூலம் இந்த நிறுவனத்தின் வருமானம் உயரும் என்றும். பேயருடன் மான்சான்டோ இணைவது  தங்கள் பங்குதாரருக்கும், வாடிக்கையாளருக்கும், தங்கள் பணியாளருக்கும், சமூகத்துக்கும் நிச்சயம் நற்பலன்கள் ஏற்படும் என்று பேயர் நிறுவனத்தின் தலைமைச் செயலர் வெர்னர் பாவ்மென் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article